போரூர் : ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
போரூர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போரூர் மேம்பாலம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் சாலையில் ஆமை போல் நகர்ந்து அணி வகுத்தும் நிற்கும் வாகனங்கள் ,வாகன ஓட்டிகள் வேலைக்கு செல்வோர் பாதிப்பு. இந்த கடும் போக்குவரத்தை நெரிசல் காரணமாக ஐயப்பன் தாங்கல் முதல் போரூர் மேம்மாலம் வரையிலும் அதேபோல் வளசரவாக்கம் ,வடபழினி செல்ல கூடிய ஆற்காடு சாலையிலும் தற்போது போக்குவரத்து நெரிசல் உண்டாகியுள்ள நிலையில் அதன் காரணமாக போரூர் செல்லும் குன்றத்தூர் சாலையிலும் கடும் போக்கு வரத்து நெறிசல் ஏற்ப்பட்டு சுமார் 2 கிலோ மீட்டரூக்கு வாகனங்கள் ஸ்தம்பித்துள்ளது .
வேலைக்கு,மருத்துவமனை ,கல்வி நிலையங்கள் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் இந்த பகுதிகளில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது . மெட்ரோ பணியால் சாலை குறுகலாக உள்ளதாலும் காலை நேரம் என்பதால் அதிக அளவு மக்கள் இந்த சாலைகளில் பயணிப்பதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மெட்ரோ பணியால் சாலை குறுகலாக உள்ள நிலையில் ஒரு சிலர் இந்த சாலை ஓர ஆக்கிரமிப்பில் கடைகள் அமைத்தும் வாகனங்களை நிறுத்தியும் உள்ளதால் காலை மற்றும் மாலை வேலைகளில் இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலானது உண்டாவது குறிப்பிடத்தக்கது.எனவே தேவையற்ற ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீசாரம் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது