வாக்கு எண்ணிக்கை தேதி அறிவிப்பு தேர்தல் ஆணையத்தின் அதிகாரம்

வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்தக்கோரிய வழக்கில் தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை தேதி அறிவிப்பு என்பது முழுக்க முழுக்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது என உயர் நீதிமன்றம் பதில் அளித்துள்ளது.

Update: 2024-03-28 04:53 GMT

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையை முன்கூட்டி நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் நீண்ட இடைவெளி உள்ளது அரசியல் சட்ட விதிகளை மீறியது என மனுதாரர் தரப்பில்  தெரிவிக்கப்பட்டு தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை தேதி அறிவிப்பு என்பது முழுக்க முழுக்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது என உயர் நீதிமன்றம் பதில் அளித்துள்ளது. வழக்கு விளம்பர நோக்குடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி தள்ளுபடி செய்ததது. தேர்தல் நடவடிக்கைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என சட்டத்தில் எந்த காலக்கெடுவும் விதிக்கப்படாத நிலையில், நீதிமன்றம் தலையிட முடியாது என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News