ரஷ்யாவில் மருத்துவ படிப்புகள் படிக்க வாய்ப்பு அளிக்கும் கண்காட்சி
ரஷ்யாவில் மருத்துவ படிப்புகளில் சேரும் வாய்ப்புகள் குறித்த ரஷ்ய கல்வி கண்காட்சி ஆழ்வார்பேட்டையில் தொடங்கியது.
Update: 2024-05-12 07:03 GMT
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தில் ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் மற்றும் வெளிநாட்டில் படிக்கும் கல்வி ஆலோசகர்கள் நடத்தும் 2024 ஆம் ஆண்டிற்கான ரஷ்ய கல்வி கண்காட்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த கல்வி கண்காட்சியில் இந்தியாவில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் தூதரகத்தின் அதிகாரி ஒலெக் அவ்தேவ், ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் இயக்குநர் அலெக்சாண்டர் டோடோனோவ், பயோடெக்னாலஜி துறை தேசிய ஆராய்ச்சி அணு பல்கலைக்கழத்தின் பேராசிரியர் எலெனா சரபுல்ட்சேவா, Propaedeutics துறையின் இணைப் பேராசிரியர் விக்டோரியா நௌமோவா, பொது நோயியல் துறை, மருத்துவ சொற்களஞ்சியத்தின் இணை பேராசிரியர் திமூர் அக்மெடோவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் மூலம் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றாலும் ரஷ்ய நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புகளை படிக்க முடியும், அவற்றுக்கான வாய்ப்புகள் குறித்தும் நடைமுறைகள் குறித்தும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இங்கு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. இன்றும் நாளையும் இங்கு நடக்கும் கல்வி தொலைக்காட்சி, மே 14 முதல் 17 ஆம் தேதி வரை மதுரை, திருச்சி , கோவை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற உள்ளது.