குன்றத்துார் தாலுகாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

குன்றத்துார் தாலுகாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-12-04 15:25 GMT

தேங்கியுள்ள மழைநீர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம், கொளப்பாக்கம் ஊராட்சி, ராமமூர்த்தி அவென்யூ பகுதியில் உள்ள பூங்காவில் கன மழையால், நான்கு நாட்களுக்கு மேலாக மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், விளையாட்டு உபகரங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில், கனமழையால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சிறுவர்கள் தண்ணீர் சூழ்ந்த பூங்காவில் விளையாடி வருகின்றனர். குன்றத்துார் அருகே, திருமுடிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட வழுதலம்பேடு கிராமத்தை கடந்து செல்லும் கால்வாயில் செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் இருகரையையும் தொட்டு பாய்ந்தோடுகிறது. இந்த பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சிறுவர்கள் சிலர் ஆபத்தை உணராமல் இந்த கரையோரம் மீன் பிடித்து வருகின்றனர்.

குன்றத்துார் அருகே, சோமங்கலம் சித்தேரி ஏரி கன மழையால் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், இந்த ஏரியின் கரை மண் அரிப்பு ஏற்பட்டு உடையும் நிலையில் பலவீனமாக உள்ளது. ஏரி உடைந்தால் அதன் கீழ் புறத்தில் உள்ள 300 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்படையும். எனவே, பொதுப்பணித் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண் மூட்டைகளை வைத்து ஏரிகரையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

குன்றத்துார் அருகே, எருமையூர் ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. கனமழையால் இந்த கல்குவாரிகள் நிரம்பி வருகின்றன. "

Tags:    

Similar News