கலைஞர் 100 கலைவிழாவிற்கான அழைப்பிதழ் முதலமைச்சரிடம் வழங்கல்
திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் “கலைஞர் 100" கலைவிழாவிற்கான அழைப்பிதழ் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முதலமைச்சரிடம் வழங்கினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-05 09:03 GMT
முதலவரிடம் அழைப்பிதழ் வழங்கிய சங்கத்தினர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில், சென்னை, கிண்டி மெட்ராஸ் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் 6.1.2024 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் “கலைஞர் 100" திரைத்துறையின் மாபெரும் கலைவிழாவிற்கான அழைப்பிதழை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி வழங்கினார்.
உடன் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் திரு. பூச்சி எஸ். முருகன், FEFSI தலைவர் திரு.ஆர்.கே. செல்வமணி, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர்கள் ஆர். ராதாகிருஷ்ணன், கதிரேசன், திரைப்பட இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் உடனிருந்தனர்.