மீன்களின் விலை கடும் உயர்வு

தூத்துக்குடி திரேஷ் புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.;

Update: 2024-06-08 07:43 GMT

தூத்துக்குடி கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நீடித்து வருவதாலும் மீன்களின் வரத்து குறைவாக இருப்பதால் தூத்துக்குடி திரேஷ் புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது ஒரு கிலோ சீலா 1500 ரூபாய் வரையும் விளை மின் கிலோ 700 ரூபாய் வரையும் பாறை கிலோ 600 ரூபாய் வரையும் விற்பனை தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் இன்று விடுமுறை மற்றும் சனிக்கிழமை என்பதால் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது

Advertisement

இந்நிலையில் கேரளாவில் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்ததாலும் தமிழகத்தில் ஏற்கனவே விசைப்படகுகள் மீன்பிடிக்க தடைக்காலம் வருகிற ஜூன் 15 ஆம் வரை தேதி வரை அமலில் இருப்பதாலும் திரேஷ் புரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகு மற்றும் பைபர் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன கடந்த ஒரு வார காலமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் குறைவான படகுகுகளே கடலுக்கு சென்றன தங்கு கடல் மீன் பிடிப்பிற்கு சென்று இன்று கரைக்கு திரும்பிய படகுகளில் பலத்த காற்று காரணமாக மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது

இதன் காரணமாகவும் கேரளாவுக்கு அதிக அளவு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது ஒரு கிலோ சீலா 1500 ரூபாய் வரையும் ஒரு கிலோ விளை மீன் 700 ரூபாய் வரையும் ஊலி மற்றும் பாறை மீன்கள் ஒரு கிலோ 600 ரூபாய் வரையும் அயிலேஷ் கிலோ 300 ரூபாய் வரையும் கேரை மற்றும் சூரை ஆகிய மீன்கள் கிலோ 300 ரூபாய் வரையும் நண்டு ஒரு கிலோ 500 ரூபாய் வரையும் விற்பனையானது பறவை மீன்கள் கிலோ 250 ரூபாய் வரை விற்பனையானது சாலை மீன் வரத்து முற்றிலும் இல்லாததால் சிறிய வியாபாரிகள் கவலை அடைந்தனர் ஜூன் 15ஆம் தேதிக்கு பிறகு விசைப்படகுகள் கடலுக்குச் சென்ற பின்பு மீன்களின் வரத்து அதிகம் காணப்பட்டால் மீன்களின் விலை குறைய வாய்ப்பு என மீனவர்கள் தெரிவித்தனர்




Tags:    

Similar News