தொடக்கக் கல்வி ஆசிரியர் குழுவினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அரியலூர், ஜூன் 29- தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றக்கூடிய 90% ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக் கூடிய மாநில முன்னுரிமைக்கான அரசாணை எண்.243}ஐ உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர்(டிட்டோஜாக்) வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையில் பதவி உயர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் வழக்கின் தீர்ப்பு இறுதித் தீர்ப்பு வரும் வரை அறிவிக்கப்பட்டுள்ள பொது மாறுதலை நிறுத்தி வைக்க வேண்டும். பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணையினை மாற்றி அமைத்து ஒன்றிய அளவில் மட்டும் கலந்தாய்வினை நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ.கருணாநிதி தலைமை வகித்தார்.தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் இ.எழில் , தமிழக தொடக்கக் கல்வி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் க.பாண்டியன், தமிழ்நாடு ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலர் தெய்வ.குமார் ஆகியோர் முன்னிலை வகித்து வகித்து கோரிக்கை விளக்கவுரையாற்றினார். தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் துரை க.சுந்தரமூர்த்தி சிறப்புரையாற்றினார். முன்னதாக வட்டாரச் செயலர் சிவராமன் வரவேற்றார். முடிவில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலர் சண்முகம் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.