சேலத்தில் ரூ.30லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார மையம்

சேலத்தில் ரூ.30லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார மையம் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-06 09:32 GMT

சேலத்தில் ரூ.30லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார மையம் கட்டும் பணிதுவக்கம்.


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாநகராட்சி 56-வது வார்டு கலைஞர் நகர் 3-வது கிராஸ் பகுதியில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார துணை மையம் கட்ட வேண்டுமென அந்த பகுதி மக்கள் சேலம் மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவரும், வார்டு கவுன்சிலருமான ஏ .எஸ் .சரவணன் மூலம் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை ஏற்று சேலம் மாநகராட்சி நிர்வாகம் நகர்புற ஆரம்ப துணை சுகாதார மையம் கட்டும் பணிக்கு 15-வது மத்திய நிதி குழு 2023- 2024-ம் ஆண்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கியது. இதையடுத்து அந்த பணிக்கான பூமி பூஜை இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் பங்கேற்று பணியை தொடங்கி வைத்தார். அப்போது மண்டல குழு தலைவர் அசோகன் , பகுதி செயலாளர் சரவணன், வார்டு செயலாளர் பம்பாய் முருகேஷ், பகுதி துணை செயலாளர் ராஜசேகர் உள்பட பலர் உடன் இருந்தனர். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News