மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி?

பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்திற்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-03-07 07:30 GMT

பிரதமர் மோடி

பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்திற்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்க உள்ள நிலையில் பிரதமர் மோடி தேர்தல் அறிவிப்புக்குப் பின் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வர இருக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே திமுக எம்பி கனிமொழி பிரதமர் மோடி தமிழகத்திலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கினாலும் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என விமர்சனம் செய்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடி மார்ச் 22 ல் தமிழகம் வருவதாக கணிப்புகள் தெரிவிக்கப்படுகிறது.

Tags:    

Similar News