பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரம் வருகை

பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வரும் 20-ம் தேதியன்று ராமேஸ்வரம் வருகிறார்.

Update: 2024-01-18 01:24 GMT

பிரதமர் மோடி 

ராமேஸ்வரம் வருகை தரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 20 ந்தேதி பகல் 2.45 - 3.30 மணி வரை ராமநாதசுவாமி திருக்கோவில் வளாகத்தில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடி பின்னர் சுவாமி தரிசனம் செய்கிறார். அதனை தொடர்ந்து ராமாயணம் கதா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் ராமகிருஷ்ண மடத்தில் இரவு ஒய்வெடுக்கிறார். மறுநாள் 21ந்தேதி காலை 9.30 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு செல்லும் பிரதமர் அங்கு கடலில் பூஜை வழிபாடு செய்து பின் காலை 10.30 - 11 மணி வரை கோதண்ட ராமர் கோவிலில் வழிபாடுகளை முடித்து கொண்டு 11.30 மணியளவில் ராமேஸ்வரம் ஹெலிபேட் தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் மதுரை புறப்படுகிறார்.
Tags:    

Similar News