பேராசிரியர் அன்பழகன் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் - முதலமைச்சர் மலர் தூவி மரியாதை
மறைந்த திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 4ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.;
Update: 2024-03-07 06:49 GMT
மறைந்த திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 4ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பேராசிரியர் அன்பழகனின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பேராசிரியர் அன்பழகனின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. திமுகவில் நீண்ட நாட்களாக பொதுச் செயலாளராக இருந்தவர் அன்பழகன் அவருடைய படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, அ.ராசா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.