அனுமதியின்றி பிரச்சாரம்? - மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு !
வேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் மீது பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-29 09:42 GMT
மன்சூர் அலிகான்
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரணாம்பட்டு பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில்,அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மீதும், பேரணாம்பட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழின மறுமலர்ச்சி கழகம் சார்பில் நடிகர் மன்சூர் அலிகானை ஆதரித்து வேட்பாளர் அறிமுக கூட்டம் அனுமதியின்றி நடத்தியதாக பேரணாம்பட்டை சேர்ந்த தமிழின மறுமலர்ச்சி கழக நிறுவன தலைவர் லியாகத் அலி என்பவர் மீதும் பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.