பேராசிரியர்கள் கல்லூரி முதல்வரை கண்டித்து போராட்டம்

அரியலூர் அருகே அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி முதல்வரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-07-01 11:30 GMT

அரியலூர் அருகே அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி முதல்வரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அரியலூர், ஜூலை 1- அரியலூர் அருகே அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி முதல்வரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது இந்நிலையில் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் தற்காலிக பேராசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் போராட்டத்தில் தற்காலிக பேராசிரியர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பணி நீட்டிப்பு கடிதம் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சில தற்காலிக பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு கடிதம் வழங்கவில்லை எனவும் இதற்கு கல்லூரி முதல்வர் தான் காரணம் எனவும் குற்றம் சாட்டினர் மேலும் கல்லூரி முதல்வர் செந்தமிழ் செல்வன் மீது பாலியல் மற்றும் பல்வேறு புகார்களை கூறிய தற்காலிக பேராசிரியர்கள் மீது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பணி நீட்டிப்பு கடிதம் வழங்க தடையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினர் இவ்வாறு பேராசிரியர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் கல்லூரி முதல்வர் செந்தமிழ் செல்வனை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் கல்லூரியில் பணியாற்றும் தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் நிரந்தர பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News