மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டால் போராட்டம் - டாக்டர்.கிருஷ்ணசாமி

மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும். மாஞ்சோலையில் போராட வேண்டிய சூழல் இதுவரை நிலவவில்லை, ஒருவேளை மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேறினால் போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.;

Update: 2024-06-20 08:51 GMT

டாக்டர்.கிருஷ்ணசாமி 

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களை வெளியேற்றுவது தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சட்டவிரோதமாக கட்டாயப்படுத்தி வெளியேற செய்கிறார்கள்..மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள் களக்காடு, முண்டந்துறை வனப்பகுதியில் 8373 ஏக்கர் பரப்பளவில் தேயிலை தோட்டங்கள் 200 ஆண்டுகளாக இருந்து வருகிறது. சட்டப்படியாக 2028 ஆம் ஆண்டு தான் தொழிலாளர்கள் பணி நிறைவு பெற உள்ளது.

Advertisement

ஆனால் இப்போதே அவர்களை வெளியேற்றுவதன் அவசியம் என்ன?. மாஞ்சோலையில் இயற்கை உரங்களின் மூலம் தேயிலை உற்பத்தியாகி வருகின்றன.உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு உலகத்தரம் வாய்ந்த தேயிலை உற்பத்தி தளமாக மாஞ்சோலை விளங்குகிறது. அங்கு பணிபுரிபவர்கள் கொத்தடிமைகளாக நடத்தபடுத்துகிறர்கள். நாளொன்றுக்கு 490 ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்கள். பிபிடிசி நிர்வாகம் 45 நாட்களுக்குள் அங்குள்ளவர்களை கட்டாயமாக வெளியேற்ற கையெழுத்து பெற்றுள்ளார்கள். மாஞ்சோலை தொடர்பாக முதலமைச்சரின் தனி செயலாளருக்கு கடிதம் எழுதியும் இன்று வரை பதில் இல்லை.

மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்களின் வாழ்வுரிமையை நீக்கி அவர்களை வெளியேற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உயிரை மாய்த்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வெளியேற்றி விட்டு அந்த இடத்தை யாரிடம் ஒப்படைக்க போகிறீர்கள் ? மாஞ்சோலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை சந்தேகத்திற்கு உள்ளாகிறது. தனிப்பட்ட முதலாளிகளுக்கு பயன்படுவதற்காகவே மாஞ்சோலை தேயிலை தோட்டம் பறிக்கப்படுகிறது. தேயிலை தொழிலாளர்களை வெளியேற்றுவது அரசின் முடிவா?.தமிழ்நாடு அரசு வேறு பயங்களுக்காக உள்நோக்கத்தோடு செயல்படுகிறது.தேயிலை தோட்ட விவகாரத்தில் அரசின் மொளனம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்திக்க காவல் துறை அனுமதி வழங்காதது ஏன்? மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசே ஏற்று வழி நடத்த வேண்டும். மாஞ்சோலையில் போராட வேண்டிய சூழல் இதுவரை நிலவவில்லை, ஒருவேளை மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேறினால் போராட்டம் நடத்தப்படும். என தெரிவித்தார்..

Tags:    

Similar News