பி.எஸ் ராகவன் துணிச்சலான முடிவு எடுக்கும் ஐஏஎஸ் அதிகாரி - நிர்மலா சீதாராமன் புகழாரம்.
மறைந்த பி.எஸ். ராகவன் சிறந்த ஐஏஎஸ் அதிகாரி.பல்வேறு தருணங்களில் துணிச்சலாக முடிவு எடுக்கக் கூடியவர், தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை குறித்து பல்வேறு காலகட்டங்களில் என்னிடம் பல கருத்துக்களை அவர் எடுத்துரைத்துள்ளார். என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் மறைந்த பி.எஸ். ராகவன், ஐ.ஏ.எஸ் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். மேலும் ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கோபாலகிருஷ்ணன் , மறைந்த வேளாண் விஞ்ஞானியின் மகள் சௌமியா விஸ்வநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மறைந்த பி.எஸ். ராகவன் சிறந்த ஐஏஎஸ் அதிகாரியாக செயல்பட்டவர் பல்வேறு தருணங்களில் துணிச்சலாக முடிவு எடுக்கக் கூடியவர். தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை குறித்து பல்வேறு காலகட்டங்களில் என்னிடம் பல கருத்துக்களை அவர் எடுத்துரைத்துள்ளார், மக்களிடம் தொழில்நுட்பம் எவ்வாறு உள்ளது என்பதை குறித்தும் நாங்கள் ஆலோசித்து உள்ளோம் என அவர் கூறியுள்ளார் . பல்வேறு சட்ட நடைமுறைகளை சமநிலைப்படுத்த வேண்டும் . நான் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கும்பொழுது எனக்கு பல்வேறு ஆலோசனைகளையும் அவர் வழங்கி உள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அரசியல் ஆலோசகராக இருந்துள்ளார் . பலருக்கு உதவும் நினைப்போடு ஒரு சிறந்த மனிதராக வாழ்ந்தவர் அவர் எனப் புகழாரம் சூட்டினார். அவரது ஆலோசனைகளை கண்டு பல நேரங்களில் நான் வியப்படைந்துள்ளேன் அவரது வயது முதிர்ச்சியால் உடல்நலம் பாதிப்பு ஏற்படும் போது அவர் உடல் நலம் குணமடைய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தேன். அவரது இறப்பு மிகப்பெரிய பேரிழப்பு எனவும் , 60 ஆண்டுகாலம் இந்தியாவின் கருவூலமாக இருந்தார் தனித்து நிற்காமல் அனைவரையும் ஒன்றிணைத்து அரவணைத்து இயங்கக்கூடிய மனிதனாக இருந்தார் . சென்னையில் சீனா ஆய்வு மையத்தை நிறுவினார். பல்வேறு தொழிலைச் சார்ந்த வல்லுனர்கள் அவரைப் பற்றி எடுத்துரைத்துரைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.