பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் இரண்டாவது நாளாக பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு- பெட்ரோல் நிலையங்களை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Update: 2023-12-20 06:19 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளை மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் பொருட்களை வாங்க வந்த நிலையில் தூத்துக்குடி மாநகரில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களில் உள்ள மோட்டார்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளது. பெட்ரோல் நிலையங்களுக்கு பெட்ரோல் போட வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தங்களது அத்தியாவசிய தேவைக்கு கூட இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பெட்ரோல் நிலையங்களில் உள்ள மழை நீரை அகற்றி அதனை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.