சேலம் மாநகராட்சியில் சாக்கடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
சேலம் மாநகராட்சி 6வது வார்டு பகுதியில் சாக்கடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்.
சேலம் மாநகரில் 4 மண்டலங்களில் உள்ள 60 வார்டுகளில் சேதம் அடைந்த சாலைகளை மறுசீரமைக்கும் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் சாக்கடை கால்வாய் இல்லாத இடங்களில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டும் வருகிறது. நீர் வழித்தடங்களில் சாக்கடை சீரமைக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாநகராட்சி 6வது வார்டு பாண்டியன் தெரு 1, 2 மற்றும் 3 தெருக்களில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. மழை பெய்தால் சாக்கடை நீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இது பெரும் அவதியை ஏற்படுத்தி வருகிறது. எனவே சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அஸ்தம்பட்டி மண்டல உதவி செயற்பொறியாளர் செந்தில்குமாரிடம் கேட்டபோது அஸ்தம்பட்டி மண்டலம் 6வது வார்டில் சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாண்டியன் தெருவில் பொதுமக்களின் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தில் உடனடியாக சாக்கடை கால்வாய் அமைக்க முடியும். இதற்கு பொதுமக்கள் தங்களது பங்களிப்பை அளித்தால் போதும் இருப்பினும் மாநகராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யும் போது பணி செய்யப்படும் என்றார்.