ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் - டிடிவி தினகரன்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அமமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-15 11:16 GMT
தினகரன்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் முன்னிட்டு பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடுகிறது. இந்த நிலையில் அவருடைய பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி மாலை 4 மணிக்கு தேனி மாவட்டம் தேனி நகரம் பங்களா மேட்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.