அயோத்தியாப்பட்டணம் அருகே பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

அயோத்தியாப்பட்டணம் அருகே ஊருக்குள் வராமல் சென்றதால் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-12-09 10:10 GMT

பேருந்தை சிறைப்பிடித்து போராட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஊருக்குள் வராமல் சென்றதால் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அயோத்தியாப்பட்டணம் அருகே பரபரப்பு ஏற்பட்டது. சேலத்தில் இருந்து சென்னை, சிதம்பரம், கடலூர், கள்ளக்குறிச்சி, ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் அயோத்தியாப்பட்டணத்துக்கு வராமல் தேசிய நெடுஞ்சாலை புறவழிச் சாலையில் செல்கிறது.

இதனால் அயோத்தியாப்பட்டணம் பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இதனையடுத்து அயோத்தியாப்பட்டணம் புறவழிச் சாலையில் சென்று பயணிகளை ஏற்றாமல் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி வந்தார். பஸ்சை சிறைபிடித்த பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து அந்த வழியாக வந்த 50-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் அயோத்தியாப்பட்டணம் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. அந்த வழியாக பஸ் டிரைவர்களை உரிய வழித்தடத்தில் பஸ்களை இயக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

அதேபோல் பொதுமக்களிடமும், முறையாக அதிகாரிகளிடம் முறையிட வேண்டும். இதுபோன்று பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News