புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் நல்லடக்கம்!

புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Update: 2024-03-07 08:56 GMT

சிறுமியின் உடல் நல்லடக்கம்

புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரியில் சிறுமி கொல்லப்பட்டு சாக்கு முட்டையில் கட்டி சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும், நடிகர்களும், பொதுமக்களும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக சிறுமியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் முதலமைச்சர் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் சிறுமியின் உடலை வாங்கி என்று இறுதி ஊர்வலத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமியின் இறுதி ஊர்வலம் 2 கிலோ மீட்டருக்கு அணிவகுப்பு செய்யப்பட்டு சிறுமியை பொதுமக்கள் வழி அனுப்பி வைத்தனர்.

மேலும் சிறுமியின் உடலை எடுத்து சென்ற வாகனத்தில் விளையாட்டு பொம்மைகள், சிறுமி பள்ளிக்கு எடுத்துச் சென்ற புத்தகப்பை உள்ளிட்ட பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும் ஊர்வலத்தில் போதை பொருள் ஒழிப்பை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. போதை பொருள் நடமாட்டமே சிறுமியின் குலைக்கு காரணம் என குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில் போதி பொருள் ஒழிப்பை வலியுறுத்தி முழக்கத்துடன் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

மேலும் சிறுமி கொலை செய்யப்பட்ட பகுதியில் சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. எஸ் வி கலைவாணன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை அடுத்து சிறுமி கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சாக்கடை பகுதிகளில் டிஜிபி ஸ்ரீ நிவாஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் நான்கு பேர் கொண்ட தடையவியல் நிபுணர்கள் கைரேகை உள்ளிட்ட தடயங்கள் முதலியவற்றை சேகரித்து சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்புரை செய்யக்கூடாது மீறினால் சாட்சியாக சேர்த்து விசாரிப்போம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News