சென்னை மாநகராட்சியில் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாம்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் ஊசி செலுத்தும் இலவச முகாம் தொடங்கியது.

Update: 2024-04-30 01:52 GMT

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் ஊசி செலுத்தும் இலவச முகாம் நடந்தது.


பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் (Rabies) தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் ஊசி செலுத்தும் மாபெரும் இலவச முகாமினை அடையாறு மண்டலம், வார்டு-180, திருவான்மியூர், திருவள்ளுவர் நகர் கடற்கரையில், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ராதாகிருஷ்ணன், நேற்று (29.04.2024) தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் (Anti Rabies Vaccine) தடுப்பூசியினை செலுத்தி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆணையாளர் ஜெய சந்திர பானு ரெட்டி, மாநகர நல அலுவலர் ஜெகதீசன், கால்நடை மருத்துவ அலுவலர் கமாலுதீன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News