வானொலி ஒலிபரப்பும், உத்திகளும் புத்தகம் வெளியீடு

கனடா வானொலியின் தலைவர், கனடா தமிழ் ஊடகத் துறை முன்னோடி நடா இராஜ்குமாரின் "வானொலி ஒலிபரப்பும், உத்திகளும்" புத்தகம் வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2024-01-16 15:08 GMT

புத்தகம் வெளியீடு

கனடாவின் புகழ்பெற்ற தமிழ் வானொலியான East FM 102.7 ன் தலைவரும், கனடா தமிழ் ஊடகத் துறையின் முன்னோடியுமான நடா இராஜ்குமாரின் படைப்பான "வானொலி ஒலிபரப்பும், உத்திகளும்" நூல் வெளியிடப்பட்டது.

இது சென்னைப் புத்தகக் காட்சிக்கு வானொலித் தொடர்பாக என்ன புத்தகம் வாங்கலாம் என்று கேட்பவர்களுக்கு பரிந்துரைக்கும் புத்தகம். இந்த புத்தகத்தில் வானொலி வரலாறு, தமிழ் வானொலியின் தொடக்கம்,

வானொலிக் கலை, அடிப்படை தகுதிகள், தொழில் நுட்பங்கள், தொகுப்பாளர்கள், நிகழ்ச்சி தயாரிப்பு, செய்தி தயாரிப்பு போன்ற அடிப்படை தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளார். அது மட்டுமல்லாது இந்த துறையில் வருபவர்களுக்காக உரை எழுதுதல், பேட்டி காணுதல், கலையகம், வானொலி நெறிமுறைகள், சவால்கள் மற்றும் உத்திகள்,

தற்போதைய தொழில்நுட்பம், நிலையத்தின் நிலைத்தன்மை, வானொலியின் எதிர்காலம் போன்ற தலைப்புகளில் விரிவாக எழுதியுள்ளார். "வானொலியில் தமிழ் ஆட்சி, வானமெங்கும் நமது ஆட்சி" என்ற முத்திரை சொற்றொடருடன் தொடங்கும் இந்த புத்தகம், வானொலித் தொடர்பாக இந்த வருடம் வெளிவந்துள்ள முக்கிய புத்தகமாகும். புத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: East FM 102.7, 151, Nashdene Road, Unit 17,18 Scarborough, Ontario M1V2T3, Canada

Tags:    

Similar News