நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,355 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் நீர்மட்டம் 45.2 அடியாக உயர்ந்துள்ளது.

Update: 2023-10-19 05:55 GMT

மேட்டூர் அணை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காவிரி தண்ணீரை பங்கிடுவது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடகா தரமறுப்பதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாகவே இருந்து வந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்திருந்தது. இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நீர்வரத்து நேற்று வினாடிக்கு 6,846 கன அடியாக இருந்த நிலையில் இன்று 7,355 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 45.62 அடியாகவும் நீர் இருப்பு 15.16 டி.எம்.சி, யாகவும் உள்ளது குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது

Tags:    

Similar News