மழை நீர் அகற்றும் பணி - கனிமொழி எம்பி ஆய்வு

மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதியில் மழை நீர் அகற்றும் பணியை கனிமொழி எம்பி நேரில் ஆய்வு மேற்கொண்டார்

Update: 2023-12-29 01:12 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 18 ஆகிய இரு தினங்களில் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மழை நீரை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது இருந்தபோதும் பல்வேறு பகுதிகளில் மழை நீர் இன்னும் வழியாததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாப்பிள்ளையூரணி - பாரதி நகர் மற்றும் சோட்டையன் தோப்பு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி பார்வையிட்டு, நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார் மற்றும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தார்.

Tags:    

Similar News