மழைநீர் வடிகால் பணிகள் இணையதளத்தில் வெளியிடப்படும் - ராதாகிருஷ்ணன்

மண்டல வாரியாக மழைநீர் வடிகால் பணிகள் இணையதளத்த முகவரியில் வெளியிடப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-16 01:14 GMT

சென்னை கிண்டி எம் எஸ் எம் இ அரங்கில் பெண் தொழில் முனைவோர்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதில் உள்ள சிரமங்களை எளிதாக்கும் வகையில் உற்பத்தியாளர்களையும் விற்பனையாளர்களையும் இணைக்கும் பாலமாக சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் ஒரு சில புதிய தயாரிப்பு பொருட்களை வெளியிட்டனர், ஒன்றை பெண் தொழில் முனைவோர்களுக்காக செயல்பட்டு வரும் WEE அமைப்பினர் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரின் மனைவி கிருத்திகா ராதாகிருஷ்ணன் பங்கேற்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் இராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் 12 ஆயிரம் உறுப்பினர்கள் கொண்டு WEE அமைப்பு செயல்பட்டு வருகிறது. தரமாக பெண்கள் வீட்டிலேயே தயாரிக்க கூடிய பொருட்களை வைத்து கண்காட்சி நடத்தி பெண்களை தொழில் முனைவோராக ஆக்கும் முயற்சி. டி யு சி எஸ் தனி அமைப்பு மூலம் சுய உதவிக்குழு பொருட்களுக்கு ஒதுக்கீடு, கூட்டுறவுத்துறை மூலம் அமுதம் போன்ற கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இதுபோன்ற சுயமாக தொழில் செய்யும் பெண்களின் உற்பத்தி பொருட்களையும் அந்த கடைகளில் விற்பனை நடவடிக்கை எடுக்கிறோம் என்றார். சென்னை மட்டுமல்ல உலக அளவில் அவ்வப்போது, மழை பெய்கிறது.

கடந்த காலங்களை போல் இல்லாமல் திடீரென குறைவான நேரத்தில் அதிக அளவிலான மழை பதிவாகிறது. பருவமழை காலங்களில் தான் இயல்பாக மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை குறைவாக சென்னைக்கு இருக்கும் நிலையில், தற்போது அதிகமாக பெய்து வருகிறது. கொசஸ்தலை பகுதியில் 72 விழுக்காடு முடிக்கப்பட்டுள்ளது. கோவளம் 80 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் வடசென்னை பகுதியில் 72%, தென்சென்னை பகுதியில் 80% பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மடிப்பாக்கம் 13,14,15 இடங்களில் சேற்று சாலைகளாக உள்ளன. சேறு தேங்குவது பெரிய சவாலான பணியாக உள்ளது. அதனை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். வளர்ச்சி பணிகள் உடன் சேறினை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. கொசு உற்பத்தியை தடுக்க கொசு மருந்து அடிக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. பொது மக்களுக்கு அன்பான வேண்டுகோள் வைக்கிறோம். உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் அனுமதி இல்லாமல் வீடு கட்டினால் அவற்றை இடிக்க உத்தரவிட்டுள்ளது. அனுமதி இல்லாமல் புதிதாக வீடு கட்டுவது சட்டத்திற்கு புறம்பானது.

அதனை இடிக்க நீதிமன்ற வழிகாட்டு உத்தரவுகள் உள்ளது. புதிதாக ஒப்புதல் இல்லாமல் கடற் பகுதிகளில் வீடுகளை கட்ட வேண்டாம். அப்படி வீடுகள் கட்டப்பட்டால் அவை இடிக்கப்படும் அங்கு கவன குறைவாக இருந்த மாநகராட்சி ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்புதல் பெற்றாலும் அதை மீறி சட்டத்திற்கு புறம்பாக கட்டிடம் ஒரு சிலர் கட்டிடம் கட்டுகின்றனர். சட்டத்திற்கு புறம்பாக கட்டடங்களை கட்டி நீங்களும் பிரச்சனைக்கு உள்ளாக வேண்டாம். எங்களையும் பிரச்சினைக்கு உள்ளாக்க வேண்டாம், உங்களுக்கும் அது நஷ்டத்தை கொடுக்கும். பணிகளை முடிந்தது என்று கணித அடிப்படையைக் கொண்டு சொல்லி விட முடியாது. மண்டல வாரியாக எந்தெந்த பணிகள் எவ்வளவு நிலையில் உள்ளது, பணிகள் எவ்வளவு முடிந்துள்ளது என்பது குறித்து மாநகராட்சி இணையதள முகவரியில் வெளியிடப்படும். பள்ளிக்கரணை உள்ளிட்ட பல பகுதிகளில் எப்போதும் தண்ணீர் தேங்கும். லஸ் தேவாலயம் பகுதிகளில் எல்லாம் மெட்ரோ பணியால் நிச்சயம் நீர் தேங்கும். வேளச்சேரி சதுப்புநில பகுதி அருகே உள்ள குடியிருப்பு பகுதி போன்ற இடங்களில் என்ன திட்டமிட்டாலும் தண்ணீர் தேங்கும் பகுதிகள் உள்ளன.

அவை அடையாளம் காணப்பட்டு அதற்கான மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது தெரு நாய்கள், வெறிநாய்கள் பிரச்சனை இந்திய அளவில் உள்ளது. சில நாடுகளில் அளவுக்கு அதிகம் தெரு நாய்கள் இருந்தால் அவற்றை யாரும் தத்து எடுத்துக் கொள்ளவில்லை என்றால் இறுதி முயற்சியாகதான் உயிரை எடுப்பார்கள். சமுதாயத்தில் உள்ள நாய்களை கருத்தடை செய்து அதே இடத்தில் விட வேண்டும் என்பது தான் விதி. நாய்களுக்கு என உள்ள சட்டவிதிகளில் மாற்றம் கொண்டுவர வேண்டிய தேவை உள்ளது. விலங்குகள் நல வாரிய சட்ட திட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க முடியுமா என்பதை ஆய்வு செய்து வருகிறோம். 5000க்கும் மேற்பட்டோர் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் லைசன்ஸ் பெற்றுள்ளனர். கட்டாயம் நாய்களை வெளியே கொண்டு செல்லும் பொழுது கட்டி எடுத்துச் செல்ல வேண்டும்.

தெரு நாய்களுக்கு உணவளிப்பதை தடுக்க முடியாது என்றாலும் உணவு அளிப்பவர்கள் வெறிபிடித்த நாய்களாக இருப்பதை கவனித்து அவற்றை தவிர்க்க வேண்டும். மாநகராட்சி விளையாட்டு திடல்களில் அனைவரும் பயன்படுத்தும் வகையிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு மேம்படுத்தப்படுகிறது. விளையாட்டு திடல்களை பயன்படுத்துவோர் விரும்பும் வகையில் தான் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் அதற்கு எதிர்ப்பு இருக்கிறது. கலந்தாலோசித்து அதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், விளையாட்டு திடல்கள், மைதானங்களில் அடிப்படை தேவைகளை மேம்படுத்த அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். எந்த இடங்களில் அனைவருக்கும் பயன்படும் வகையில் விளையாட்டு திடல்களை மாற்ற முடியுமோ அதையும் செய்ய நடவடிக்கை எடுக்கிறோம்.

Tags:    

Similar News