வேலூர் வேட்பாளருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஏசி சண்முகம் வெற்றி பெற நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-22 06:56 GMT

ஏசி சண்முகம் 

பாஜக கூட்டணியில் அனைத்து கட்சிகளுக்குமான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாஜக சார்பில் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகத்துக்கு வேலூர் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டு அவர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் தேர்தலில் வெற்றி பெற நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த் இந்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார். அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து விட்டாலும் அரசியல் தொடர்பான செயல்பாடுகளில் அவரை பலரும் தொடர்பு படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்தின் நண்பரான ஏ சி சண்முகத்திற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளதும் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது.
Tags:    

Similar News