பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி சிறப்பு வழிபாடு

பனப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி முன்னிட்டு நடைப்பெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-04-18 09:28 GMT

ராமநவமி

பனப்பாக்கம் பேரூராட்சி, திருமுருகன் நகரில் அமைந்துள்ள பக்த ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று ராமநவமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக மூலவர் ஆஞ்சநேயருக்கு நெய், பால், இளநீர், சந்தனம், வாசனை திரவியங்கள் ஆகியவற்றால் சிறப்பு அபி ஷேகம் செய்யப்பட்டது. பின்பு அலங்காரம் செய்யப்பட்ட ராமர் பாதத்திற்கு பஞ்சாமிர்தம், பாயாசம், சுண்டல், பொங்கல் ஆகியவை படைக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் 108 முறை ஸ்ரீராமஜெயம் சொல்லி வழிபட்டனர். ராமநவமி தினத்தில் ஸ்ரீராமஜெயம் சொல்வதால் கடன் பிரச்சினை, உடல் வியாதி, குழந்தையின்மை ஆகியவை நீங்கி அன்பும், நிம்மதியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News