ரம்ஜான் பண்டிகை: மளிகை பொருட்கள் வழங்கிய தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம்!
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 500 ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-11 06:16 GMT
ரம்ஜான் பண்டிகை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றிய, நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆதரவற்ற ஏழை, எளியோர், விதவை மக்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பைகள் 500 ஆதரவற்ற பெண்களுக்கு வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பி.எஸ்.நிஜாமுத்தின் தலைமை தாங்கினார். குடியாத்தம் ஒன்றிய தலைவர் பி.எஸ்.ஷஹாபுத்தின் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ஹாபிஸ் முஹம்மதுசாதிக், தொழிலதிபர் கள் வாணக்கடை அஜிசுல்லா, பேட்டரி சமியுல்லா, மாவட்ட செய லாளர் இக்பால் ஆகியோர் மளிகை பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலா ளர்கள் சான்பாஷா, நூருல்லா, நகர தலைவர் சிக்கந்தர்பாஷா மற் றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.