பால் தட்டுப்பாட்டை போக்க வேண்டும், குடும்பத்துக்கு ரூ.10,000 வழங்க ராமதாஸ் கோரிக்கை

Update: 2023-12-06 07:36 GMT

ராமதாஸ் கோரிக்கை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஆவின் பால் விற்பனை நிலையங்களில் பால் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கின்றனர்.

அவர்களில் பெரும்பான்மையினர் பால் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை தான் காணப்படுகிறது.

மக்களின் விரக்தியும், ஏமாற்றமும் கோபமாக மாறுவதற்கு முன் பால் தட்டுப்பாடு போக்கப்பட வேண்டும்.

அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு தேவையான அளவு பால் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

சென்னையில் 3 நாட்களாகியும் வெள்ளம் வடியாத நிலையில் குடும்பத்துக்கு தலா ரூ.10,000 வழங்க வேண்டும்

மழையால் சென்னை, புறநகர் பகுதியில் குடும்பங்கள் பொருளாதார, வாழ்வாதார இழப்பை சந்தித்துள்ளன என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News