ராணிப்பேட்டை: 528 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

Update: 2023-12-04 07:55 GMT

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நிக்ஜாம் புயல் உருவாகி சென்னை , காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புயல் காரணமாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க 47 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில், 8 முகாமில்களில் 268 பேர் தற்போது வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. நெமிலி வட்டம் உத்திரம்பட்டு பகுதியில் முகாமில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஊகர வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி ஆகியோர் உடன் இருந்தனர். 

தொடர் மழைக்காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் மொத்தமாக   528 ஏக்கரில் நெல் பயிர் நீரில் மூழ்கி உள்ளது. தோட்டக்கலை துறை பயிர்கள் பொருத்தவரையில் இதுவரை விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி மாவட்டத்தில் மிளகாய் நாற்று 50 ஏக்கர் பரப்பளவிலும், கீரைகள் 30 ஏக்கர் பரப்பளவிலும் நீரீல் மூழ்கி உள்ளது. மேலும், கத்தரிக்காய், வெண்டைக்காய் பயிர்களும் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News