ராணிப்பேட்டை: வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 12 Dயை வரும் மார்ச் 25க்குள் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Update: 2024-03-20 15:56 GMT
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு தகுதியான அனைத்து வாக்காளர்களும் விடுபடாமல் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு படிவம் 12 D வழங்கப்பட உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான வளர்மதி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில்,"பூர்த்தி செய்யப்பட்ட வடிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பெற்று வருகிற மார்ச் 25ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதனை சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.