பாலியல் பலாத்காரம்: தனியார் வங்கி ஊழியர் கைது.

ஜெயங்கொண்டத்தில் இளம்பெண்ணை சித்திரவதை செய்து பாலியல் பலாத்காரம் செய்த தனியார் வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-05-03 10:55 GMT

ஜெயங்கொண்டத்தில் இளம்பெண்ணை சித்திரவதை செய்து பாலியல் பலாத்காரம் செய்த தனியார் வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.


ஜெயங்கொண்டத்தில் இளம்பெண்ணை சித்திரவதை செய்து பாலியல் பலாத்காரம் செய்த தனியார் வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வட வீக்கம் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சிநாதன் மகன் சிவா. இவர் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வரும் நிலையில், திருமணமான 39 வயதுடைய ஒரு பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி தங்கும் விடுதியில் வைத்து கற்பழித்துள்ளார்.

இதில் ருசி கண்ட சிவாவிற்கு மீண்டும் காமம் தலைக்கு ஏறியது. இதையடுத்து மீண்டும் அந்தப் பெண்ணிடம் காம வலையை வீசினார். இதற்கு அந்தப்பெண் மறுத்துவிட்டார். இதில் ஆத்திரமடைந்த சிவா தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால், ஏற்கனவே உடலுறவு செய்த வீடியோ காட்சிகளை கணவருக்கும், சமூக வலைதளங்களுக்கும் அனுப்பி விடுவதாக கூறி அப்பெண்ணை மிரட்டியுள்ளார்.

Advertisement

இதில் பயந்து போன அந்தப் பெண்ணை தனியார் விடுதிக்கு வரவழைத்து கற்பழித்து தனது காமவெறியை தீர்த்துக் கொண்டார். அத்தோடு விடாமல், ஏற்கனவே உடலுறவுக்கு இணங்க பெண் மறுத்த காரணத்தைக் கூறி, குடி போதையில் இருந்த சிவா அந்தப் பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் சூடு வைத்தும், கால்களால் உதைத்தும் சித்தரவதையும் செய்துள்ளார்.

இதை வெளியில் சொன்னால், நீயும் நானும் சேர்ந்திருந்த உடலுறவு காட்சிகளை சமூக வலைதளங்களிலும், உனது கணவருக்கும் அனுப்பி, உன்னை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். பின்னர் இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து காமக்கொடூரன் சிவாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags:    

Similar News