ரத்னம் படத்திற்கான நிலுவை சம்பளம்: லைக்கா நிறுவனம் பதில் அளிக்க உத்தரவு

ரத்னம் படத்திற்கான நிலுவை சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்தும்படி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் மேல்முறையீடு செய்ததற்கு லைகா நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-04-01 11:18 GMT

பட போஸ்டர்

ரத்னம் படத்திற்கான நிலுவை சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்தும்படி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் மேல்முறையீடு செய்ததற்கு லைகா நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ர

த்னம் படத்திற்காக விஷாலுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளமான ரூ.2.60 கோடியை செலுத்த ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனத்திற்கு தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் எம்.சுந்தர், கே.ஜி. திலகவதி அமர்வு உத்தரவிட்டது.

Tags:    

Similar News