செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வெளியேற்றம் குறைப்பு

ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, 1,500 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக குறைக்கப்பட்டது.

Update: 2023-12-12 05:18 GMT

செம்பரம்பாக்கம் ஏரி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி, 3.645 டி.எம்.சி., கொள்ளளவும், நீர்மட்ட உயரம் 24 அடியும் கொண்டது. 'மிக்ஜாம்' புயலின் போது பெய்த கனமழையால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், வெளியேற்றப்படும் நீரின் அளவும் படிப்படியாக உயர்த்தப்பட்டு, வினாடிக்கு 8,000 கன அடி வரை வெளியேற்றப்பட்டது. மழை நின்றதும், நீர்வரத்திற்கு ஏற்ப, வெளியேற்றப்படும் நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி ஏரிக்கு, வினாடிக்கு 1,091 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து நேற்று, ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, 1,500 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
Tags:    

Similar News