வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.45 ஆயிரத்து 41 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

Update: 2023-11-10 06:36 GMT

வைகை அணையில் தண்ணீர் திறப்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 70.51 அடியை எட்டியது.  இந்த நிலையில் மதுரை,திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து பெரியார் பாசன பகுதியில் உள்ள இருபோக சாகுபடி நிலங்களின் முதல் போக சாகுபடிக்காக வினாடிக்கு 900 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது இதில் 45 நாட்களுக்கு முழுமையாகவும் 75 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீர் திறக்கப்படும் இதன் மூலம் மதுரை ,திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது இந்தத் தண்ணீரை தேனி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் திறந்து வைக்க தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி , வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் திறக்கப்பட்ட தண்ணீருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே நள்ளிரவில் வைகை அணை நிரம்பியதால் தேனி,மதுரை, திண்டுக்கல், சிவகங்கை இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ளபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது
Tags:    

Similar News