டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் தரணும்; இபிஎஸ் வலியுறுத்தல்

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாததால் பாதிக்கபட்ட டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2024-06-29 05:40 GMT

 குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாததால் பாதிக்கபட்ட டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.  

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை, ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாததால் பாதிக்கபட்ட டெல்டா விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதார நிவாரணம் வழங்கிட திமுக அரசை வலியுறுத்தி அறிக்கை.

இந்த ஆண்டு நீரின்றி குறுவை சாகுபடி செய்ய இயலாத பகுதிகளில் உள்ள பாசனப் பரப்பு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 30,000 த்தை உடனடியாக வரட்டி நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும், குறுவை சாகுபடி செய்து நீரின்றி பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிர் காப்பீடு நிவாரணம் பெற்று தர வேண்டும் என்றும், குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படாததால் வேளாண் தொழில் இல்லாமல் பாதிக்கபட்டுள்ள வேளாண் தொழிலாளர்களுக்கு குறுவை பயிர் காலத்திற்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு மாதத்திற்கு 5000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், இந்த வறட்சியால் கால்நடைகளுக்கு வைக்கோல் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வினால் விவசாயிகளின் உப தொழிலான கால்நடை வளர்ப்பை தொடர்ந்து செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் வறட்சி ஏற்பட்ட போது விலையில்லா வைக்கோல் தீவனம் வழங்கினோம். எனவே விவசாயிகளின் உப தொழிலான கால்நடை வளர்ப்புக்கு தேவைபடும் தீவனங்களை விலையிலாமல் வழங்கிட வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News