நீதிபதி எனக்கூறி ஏமாற்றிய மத போதகர் கைது

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி என்று கூறி ஏமாற்றிய மத போதகரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-22 11:35 GMT

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி என்று கூறி ஏமாற்றிய மத போதகரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேற்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் காரில் வந்துள்ளார். அவர் தனது காரை காவல் கண்காணிப்பாளர் கார் நிறுத்தும் இடம் அருகே நிறுத்திவிட்டு வரவேற்பறையில் இருந்த ஆயுதப்படை காவலரிடம் தான் மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிவதாகவும் ஒரு வழக்கு தொடர்பாக எஸ்பியை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து வரவேற்பறையில் இருந்த காவலர் மாரியம்மாள் அவரிடம் அடையாள அட்டையை கேட்டபோது அவர் கொடுக்க மறுத்து சமாளித்துள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் விசாரித்ததில் அவர் நீதிபதி என்று பொய் கூறியது தெரியவந்தது. இதையடுத்து சிப்காட் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். போலீஸ் விசாரணையில் அவர் சென்னை கொட்டிவாக்கம் கற்பகம் அம்பாள் நகரைச் சேர்ந்த பாஸ்கர் (57) எனத் தெரியவந்தது. கிறிஸ்தவ மத போதகரான அவர், மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில குடும்ப பிரச்சனை தொடர்பாக வழக்கு விசாரணைக்கு அவர் வந்துள்ளார். அங்கும் போலீசாரிடம் தன்னை நீதிபதி என்று கூறியுள்ளார். மேலும் எஸ்பியிடம் பேசிவிட்டு வருகிறேன் என காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தபோது போலீசார் அவரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News