மீண்டும் பொலிவு பெற்ற நாகை சூடாமணி விகாரம்

கடாரம் வென்ற ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட நாகப்பட்டினம் சூடாமணி புத்த விகாரம் ரூ.8 கோடியில் சீரமைக்கப்ட்டுள்ளது.

Update: 2024-02-06 08:20 GMT

நாகை சூடாமணி விகாரம்

உலகம் முழுவதும் ஆட்சி செலுத்திய சாம்ராஜ் யங்களில் சோழ சாம்ராஜ்யத்துக்கு தனி இடம் உண்டு. பொன்னி (காவிரி ) நதி பாயும் இடங்கள் மட்டுமின்றி கடல் கடந்தும் சோழர்களின் சாம்ராஜ்யம் நீண்டிருந்தது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே இன்று கோடியக்கரை என்று அழைக்கப்படும் இடத்தில் இருந்து தான் ராஜராஜசோழன், கப்பற்படையை இயக்கியதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கிறது.

இன்றைய இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உட்பட்ட பகுதி கள் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் என்று கிபி 10ல் இருந்து 13ம் நூற்றாண்டு வரை அழைக் கப்பட்டு வந்தது. இந்த சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியான கடாரம் என்கிற (தற்கால வடக்கு மலேசியா) பகுதியின் அரசாங்க அதிகாரியான அரையன் ஸ்ரீவிஜயோதுங்க வர்மன், சோழ சாம்ராஜயத்தின் மாமன்னரான முதலாம் ராஜராஜசோழனை சந்தித்து கடாரத்து வணிகர்கள் வியாபாரத்துக்காக நாகப்பட்டினம் துறைமுகத்திக்கு வரும்போது பாதுகாப்பாக தங்குவதற்கும், புத்த மதத்தை சார்ந்த தாங்கள் வழிபடுவதற்கான இடத்தை அமைத்து கொள்வதற்கும் அனுமதி கேட்டார். அவருடைய கோரிக்கையை ஏற்று ராஜராஜசோழன் நாகையில் கிடாரத்து வணிகர்கள் தங்க புத்த விகார் கட்டி கொள்வ தற்கு அனுமதியளித்தார்.

இதையடுத்து விஜயோ துங்கவர்மன் கிபி 1005ல் நாகையில் (இப்போது பழைய நீதிமன்ற வளாகம்) புத்த விகாரை கட்டிஅதற்கு அவர் தந்தை பெயரான சூடாமணி வர்ம விகார் என்று பெயர் சூட்டினார். நாகை பழைய பாது நீதிமன்ற கட்டிடத்தின் வடகிழக்கு அடித்தள பகுதியில் சுரங்க அறைகளுக்கு செல்ல 2 வழிகள் இருந்ததாகவும், அவை விஷ ஜந்துக்களின் பயத்தால் 1970ல் மூடப்பட்ட தாகவும் வரலாற்றுற ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது நாகை பழைய நீதிமன்ற கட்டிடம் அருகில் புதிதாக நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட்டது. இதையடுத்து புதிய கட்டிடங்களுக்கு நீதிமன்றம் சென றதால் சூடாமணி விகாரம், கடந்தாண்டு ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் துறை யிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைதொடர்ந்து வரலாற்று பொக்கிஷமான சூடாமணி விகாரம் புராதான சின்னமாக அறிவிக்கப்பட்டு புனரமைப்பு செய்வதற்காக ரூ.8கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறையின் ஹெரிடேஜ் பிரிவால் சூடாமணி விகாரம் புதுப்பிக்கும் பணி கடந்தாண்டு பிப்ரவரி யில் துவங்கியது. சுண்ணாம்புடன் கடுக்காய்,கருப்பட்டி கலந்து 20 நாட்களுக்கு மேல் ஊறவைத்து அரைத்து அந்த கலவையை சுவற் றில் பூசினர். சுண்ணாம்பு காய்ந்த பின்னர் டையின் வெள்ளை கருவை மையலாக்கி சுவற்றில் பூசி மெரு கேற்றும் பணி நடந்தது. தற்போது தற்போது இப்பணி நிறைவு பெற்றுள்ளது. .

மேலும் சுரங்க அறைகளுக்கு செல்லும் 2 வழிகள் திறக்கப்படுமா? சோழமன்னர்களின் வரலாற்று பொக்கிஷமாக கருதப்படும் சூடாமணி விகாரத்தை வரலாற்று ஆவணமாக தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் மூடப்பட்ட சுரங்க அறைகளுக்கு செல்லும் 2 வழிகளை திறந்து ஆய்வு செய்தால் ராஜராஜசோழன் உடல்நலம் குன்றிய நிலையில் அவருக்கு புத்த துறவிகள் சிகிச்சை அளித்தது குறித்த உண்மை தெரியவரும் என்று வரலாற்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News