விவசாயி அருள் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து

சிப்காட்டிற்கு எதிராக போராடிய வழக்கில் விவசாயி அருள் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில் அருள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

Update: 2024-01-06 08:33 GMT

விவசாயி அருள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிராக போராடிய போராட்டகாரர்கள் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதில் 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் தமிழக அரசு 6 பேர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்தது. விவசாயி அருள் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யாமல் தொடர்ந்து சிறையில் அடைத்தனர். பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தி அவர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது. அவர் மீதான வழக்குகளை தமிழக அரசு இன்று விளக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News