சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டாஸ் சட்டம் ரத்து!

Update: 2024-05-24 10:57 GMT

 சவுக்கு சங்கர்

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ரெட் ஃபிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாகவும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை கோவையிலிருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சாமிநாதன், பாலாஜி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில் 3வது நீதிபதியின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News