கூட்டுறவு வீட்டு வசதி சங்க அபராத வட்டி தள்ளுபடி செய்ய கோரிக்கை
கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்றவர்கள் அபராத வட்டி தள்ளுபடி செய்ய கோரிக்கை;
கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்றவர்கள் அபராத வட்டி தள்ளுபடி செய்ய கோரிக்கை
கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்றவர்களுக்கு, 2016 ல் தேர்தல் அறிக்கையில் அப்போதைய முதல்வா் கருணாநிதி தேர்தல் வாக்குறுதியில் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார். அவா் அறிவித்த வாக்குறுதியை அவரது நூற்றாண்டில் நிறைவேற்ற வேண்டும் என, தமிழ் மாநில கூட்டுறவு பயனீட்டாளர் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இது குறத்து கூட்டுறவு பயனீட்டாளர் நலச்சங்கத்தினர், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், தமிழகத்தில், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்றவர்கள் வட்டி, அபராத வட்டி, தவணை தவறிய வட்டி முறைகளால் பெரும் பாதிப்பக்குள்ளாகி, மாநிலம் முழுவதும் பல்வேறு இயக்கங்களும், போராட்டங்களும் நடந்து வந்தன. இந்நிலையில, கடந்த 2016 ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க. அளித்த தேர்தல் அறிக்கையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்றவர்களின் வட்டி, அபராத வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்து, நிலுவை அசல் தொகையை மட்டும் செலுத்தினால் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என, முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். சமூக நீதி அரசான தமிழக அரசு, தற்போது கொண்டாடி வரும் கருணாநிதி நூற்றாண்டில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்றவர்களின் வட்டி, அபாரத வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்து, நிலுவை அசல் தொகையை மட்டும் ஒரே தவணையாக கட்டி முடிக்க உத்தரவிட வேண்டும். இந்த சலுகையை, அடமானக் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கும் வழங்க வேண்டும். கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களால் கைப்பற்றப்பட்டுள்ள வீடுகளுக்கும் இந்த சலுகையை வழங்கி, பட்டா வழங்க வேண்டும். ஜப்தி, ஏலம் போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.