கடலில் பக்தர் தவறவிட்ட 5 பவுன் தங்க நகை மீட்பு!

திருச்செந்தூர் கோவில் கடலில் பக்தர் தவறவிட்ட 5 பவுன் தங்க நகையை கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் கண்டுபிடித்து ஒப்படைத்தனர்.;

Update: 2024-06-24 11:00 GMT

திருச்செந்தூர் கோவில் கடலில் பக்தர் தவறவிட்ட 5 பவுன் தங்க நகையை கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் கண்டுபிடித்து ஒப்படைத்தனர்.

தூத்துக்குடியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ஜோதி. இவர்கள் குடும்பத்தினருடன் நேற்று அதிகாலையில் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர். பின்னர் ஜோதி குடும்பத்துடன் கடலில் புனித நீராடினார். அப்போது ஜோதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி கடலில் தவறி விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அங்கிருந்த புறக்காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

Advertisement

இதனையடுத்து நேற்று காலை 8 மணி முதல் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் சிற்பி அரிக்கும் தொழிலாளர்கள் 50 பேர் கடலில் நகையை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் கழித்து வேலுச்சாமி என்பவர் கடலில் தங்கச் சங்கிலியை கண்டுபிடித்தார். உடனடியாக கடற்கரை பாதுகாப்பு பணியாளர் சிவராஜா தலைமையில் அந்தநகை புறக்காவல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், தங்க சங்கிலியை தவறவிட்ட ஜோதியிடம் வழங்கினர். இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களுக்கு ஜோதி குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News