விழுப்புரம் நூலக வளாகத்தில் சுற்றித்திரிந்த புள்ளி மான் மீட்பு
விழுப்புரம் நூலக வளாகத்தில் சுற்றித்திரிந்த புள்ளி மானை வனத்துறையினர் மீட்டனர்
Update: 2024-05-05 05:19 GMT
விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள நூலக வளாகத்தில் புள்ளிமான் ஒன்று சுற்றித்திரிந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் இதுபற்றி விழுப்புரம் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்த னர். அதன்பேரில் நூலகத் துக்கு விரைந்து வந்த வனத் துறையினர் புள்ளி மானை மீட்டு அடுக்கம் கிராம வனப்பகுதியில் விட்டனர். நூலக வளாகத்தில் சுற்றித் திரிந்த புள்ளிமானை பார்க்க பொதுமக்கள் திரண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.