அம்பத்தூரில் குடியிருப்பு வாசிகள் சாலை மறியல்
அம்பத்தூரில் மூன்று நாட்களாக மெட்ரோ வாட்டர் தண்ணீர் வழங்காததால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
Update: 2024-05-03 07:43 GMT
அம்பத்தூரில் மூன்று நாட்களாக மெட்ரோ வாட்டர் தண்ணீர் வழங்காததால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மூன்று நாட்களாக மெட்ரோ வாட்டர் தண்ணீர் வழங்காததால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வாசிகள் 500 பேர் திடீரென்று சாலையில் அரசு பேருந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அம்பத்தூர் 7 மண்டலம் 90 வது வார்டு திருமங்கலம் சாலையில் 500க்கும் மேற்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வாசிகள் திடீரென்று அரசு பேருந்து மடக்கி சாலை மறியல் ஈடுபட்டனர். மூன்று நாட்களாக மெட்ரோ வாட்டர் மற்றும் போர் வாட்டர் வராததால் அவதி அடைந்து வருவதாகவும் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் குடும்பத்தோடு சாலை மறியலில் ஈடுபட்டனர். காலி குடங்களை கையில் வைத்துக் கொண்டு பேருந்தை மடக்கி சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர், காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.