அனல் மின்நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்
தூத்துக்குடியில் தமிழக அரசுக்குச் சொந்தமான அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகள் மூலம் இருந்து மொத்தம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
By : King 24X7 News (B)
Update: 2024-01-01 15:53 GMT
தூத்துக்குடியில் தமிழக அரசுக்குச் சொந்தமான அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகள் மூலம் இருந்து மொத்தம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த 17, 18 ஆம்தேதி பெய்த கனமழை காரணமாக, மின் நிலைய வளாகத்தில் மழை நீா் சூழ்ந்தது. இதைத் தொடா்ந்து மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி, கடந்த 18ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
பின்னா் வளாகத்தில் சூழ்ந்த மழை நீரை அகற்றும் பணியும், மின் உற்பத்தியை தொடங்குவதற்காக 5 யூனிட்டுகளையும் சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வந்தன. தற்போது, 5ஆவது யூனிட்டில் மட்டும் சீரமைக்கப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது, மற்ற யூனிட்டுகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.