தலைகீழாக மாறும் வானிலை..!

Update: 2024-06-11 11:16 GMT
தலைகீழாக மாறும் வானிலை..!

வானிலை ஆய்வு மையம்

  • whatsapp icon

தமிழகத்தில் இன்று முதல் வருகிற 15ஆம் தேதி வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருசில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி பாரன்ஹீட் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News