சேலம் : கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞர் கைது

வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், மோதிரம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்

Update: 2023-12-01 01:20 GMT

சேலம் : கத்தியை கடடி பணம் பறிக்க முயன்ற இளைஞர் கைது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் குகை நெய் மண்டி அருணாச்சலம் தெருவைச் சேர்ந்தவர் மோகன் (47) வியாபாரி இவர் நேற்று முன்தினம் இரவு செவ்வாய்பேட்டை ஆரம்ப சுகாதார மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தபோது இவரை வழிமறித்த வாலிபர் கத்தி முறையில் மிரட்டி மோகனிடம் இருந்த ரூபாய் 2500 மற்றும் அவர் கையில் அணிந்திருந்த ஒரு பவுன் மோதிரத்தை பறித்துக் கொண்டார். இது குறித்து மோகன் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மோகனிடம் வழிபறியில் ஈடுபட்ட செவ்வாய்ப்பேட்டை முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த ஜோசப் (23) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம் மற்றும் மோதிரம், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும் ஜேசப்பை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News