2 ஆண்டுகளில் ரூ 2 ஆயிரம் கோடி நலத்திட்டங்கள் - நலவாரிய தலைவர்

தமிழகத்தில் நலவாரியத்தில் உள்ள 50 லட்சம் தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2ஆயிரம் கோடி மதிப்பில் நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன் குமார் தெரிவித்தார்,

Update: 2024-01-31 06:09 GMT

விருதுநகரில் கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பாக சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,தொழிற்சங்க நிர்வாகிகள்,கட்டுமான தொழில் ஒப்பந்தக்காரர்கள் ஆகியோர் தொழிலாளர்களை வாரியத்தில் அதிக அளவில் சேர்க்க வலியுறுத்தியதாகவும் வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கையை எளிமைப்படுத்த அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும்,இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக கட்டுமான தொழில்தான் அதிக வேலைவாய்ப்பு வழங்கும் துறை என்பதால்,இத்துறைக்கு தனி அமைச்சகத்தை மத்திய மாநில அரசுகள் நிறுவ வேண்டும் என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் கட்டுமான தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்றி உள்ளதாகவும் தமிழகத்தில் நல வாரியத்தில் உள்ள 50 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ 2 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் கடந்த 2 ஆண்டுகளில் வழங்கப்பட்டு உள்ளதாகவும் விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை தொழிலாளர்கள் நல வாரியத்தில் 2 லட்சம் பேர் உள்ளதாகவும் இதில் 75 பேர் ஓய்வூதியம் பெற்று வருவதாகவும் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 37 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News