ஐப்பசி பௌர்ணமி கிரிவலம் - அண்ணாமலையார் கோவிலில் ரூ.2.24 கோடி காணிக்கை

Update: 2023-11-01 02:18 GMT

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலாகும். அண்ணாமலையார் கோவிலில் மாத மாதம் வரும் பௌர்ணமி கிரிவலம், சித்ரா பௌர்ணமி மற்றும் திருக்கார்த்திகை தீப திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இந்நிலையில் அண்ணாமலையார் கோவில் உட்பிரகாரம் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியலில் தினந்தோறும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், கிரிவலம் செல்லும் பக்தர்கள் மற்றும் பௌர்ணமி கிரிவலம் மேற்கொள்ளும் பக்தர்கள் காணிக்கை செலுத்தி வந்தனர். ஐப்பசி மாதம் நடைபெற்ற பௌர்ணமி கிரிவலம் முடிந்து நேற்று அண்ணாமலையார் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் ஐப்பசி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் காலை முதல் நடைபெற்றது. உண்டியல் எண்ணும் பணிகள் நிறைவு பெற்று பக்தர்களால் உண்டியலில் 2 கோடியே 24 லட்சத்தி 41 ஆயிரத்தி 224 ரூபாயும், தங்கம் 188 கிராம் மற்றும் வெள்ளி 1 கிலோ 240 கிராம் என பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News