மஞ்சத்திடலில் ரூ. 50 கோடியில் மெமு ரயில் பராமரிப்பு முனையம்

மஞ்சத்திடலில் சுமாா் ரூ. 50 கோடியில் மெமு ரயில் பெட்டிகளின் பராமரிப்பு முனையம் அமைப்பதற்கான பூா்வாங்கப் பணிகள் நடைபெறுகின்றன.

Update: 2024-02-12 07:26 GMT

மெமு ரயில்

தமிழகத்தின் மத்தியப் பகுதியாக விளங்கும் திருச்சியில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு தற்போது வரை சிறப்பாகச் செயல்படுகிறது திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம். இக்கோட்டத்தில் இயக்கப்படும் 170 விரைவு ரயில்கள், பாசஞ்சா் ரயில்கள், வாரந்திர ரயில்களில் மாதந்தோறும் 45 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனா். இதன் மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டில் திருச்சி கோட்டத்துக்கு முந்தைய ஆண்டின் வருவாயைவிட 15.33 சதவீதம் அதிகரித்து ரூ. 372.84 கோடி கிடைத்தது.

இதை மேலும் அதிகப்படுத்த ரயில்வே நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக குறைந்த தூரத்தை விரைவாகக் கடக்கும் வகையிலான 9 டெமு ரயில்கள், மெமு ரயில்களாக மாற்றப்பட்டு, இயக்கப்படுகின்றன. ஆனால் திருச்சி கோட்டத்தில் அகல ரயில் பெட்டிகள் பராமரிப்பு வசதிகளும், சில விரைவு ரயில்களுடைய பிஜி பெட்டிகளின் தொடக்க நிலைப் பராமரிப்பை மேற்கொள்ளும் வசதிகளும் உள்ள நிலையில், மெமு ரயில் பராமரிப்பு முனையம் இல்லை. எனவே திருச்சி கோட்டத்தில் பராமரிப்பு முனையம் அமைக்கக் கோரி சில ஆண்டுகளுக்கு முன் தெற்கு ரயில்வே மூலமாக விரிவான முன்மொழிவு அனுப்பப்பட்ட நிலையில், ரயில்வே வாரியம் அதற்கு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகேயுள்ள மஞ்சத்திடல் ரயில் நிலையப் பகுதியின் ரயில்வே நிலத்தில் மெமு ரயில் பராமரிப்பு முனையம் அமைக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News